கோப்புப்படம் 
வணிகம்

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவு.

DIN

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் இன்று(அக். 3) கடும் சரிவை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,002.09 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 11.22 மணி நிலவரப்படி 1,139.06 புள்ளிகள் குறைந்து 83,127.23 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 353.85 புள்ளிகள் குறைந்து 25,443.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில், இந்த வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் வீழ்ச்சியைத் தொடர்ந்து இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளிடையே மோதல் வலுத்துள்ள நிலையில் குறிப்பாக இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது, பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி, உலோகத் துறையைத் தவிர இதர துறை நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளன.

சென்செக்ஸில் மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

நிஃப்டியில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபமும், ஈச்சர் மோட்டார்ஸ், பிபிசிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

SCROLL FOR NEXT