ஜாவா 42 எஃப்ஜே மோட்டார்சைக்கிள் 
வணிகம்

புதிய ஜாவா 42 எஃப்ஜே மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான பிரீமியம் மோட்டார் சைக்கிள் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ், அதன் கீழ் மூன்று பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டுகளை கொண்டுள்ளது.

DIN

மும்பை: மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா யெஸ்டி நிறுவனமானது, புதிய 42 எஃப்ஜே நியோ கிளாசிக் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான பிரீமியம் மோட்டார் சைக்கிள் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ், அதன் கீழ் மூன்று பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டுகளை கொண்டுள்ளது.

ஜாவா போன்ற புத்துயிர் பெற்ற பிராண்டுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் எந்தவொரு சவாலையும் எங்கள் குழுமம் எதிர்கொள்ளும் என்றார் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா.

புதிய ஜாவா 42 எஃப்ஜே மோட்டார்சைக்கிள் அறிமுக விழாவில் பேசிய மஹிந்திரா, பிராண்டுகளை உருவாக்கும் கதைகள் கதைகளின் தொகுப்பைத் தவிர வேறில்லை என்றார்.

கிளாசிக் லெஜெண்ட்ஸின் விலையானது ரூ.1.99 லட்சம் முதல் தொடங்குகிறது.

அக்டோபர் 2016ல், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, அதன் துணை நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம், இந்தியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளில் ஜாவா பிராண்ட் பெயரின் கீழ் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வேளையில், அதே ஆண்டில் பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டான பிஎஸ்ஏவையும் கைபற்றியது.

நம் அனைவருக்கும் முன் சவால்கள் உள்ளது. இந்த பிராண்ட் கொண்டு வரும் உற்சாகத்தை நாம் அனைவரும் எதிர்நோக்குகிறோம். நாங்கள் ஒரு மராத்தான் கலந்து கொண்டது போல ஓடுகிறோம், நாங்கள் வீழ்ச்சியடையலாம், வியர்க்கலாம் ஆனால் நாங்கள் உயருவோம்.

கிளாசிக் லெஜண்ட்ஸ் குழுமத்தின் வளர்ச்சி, ரத்தினங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்ட மஹிந்திரா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான அனிஷ், தற்போது நிறுவனம் நாட்டின் பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிரிவில் இரண்டாவது இடத்தில் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் இடத்தை அடைய அயராது முயற்சித்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT