சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை 
வணிகம்

2 நாள் உயர்வுக்கு பிறகு சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 398.13 புள்ளிகள் சரிந்து 81,523.16 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: ஆசிய சந்தைகளில் பலவீனமான போக்குகளுக்கு மத்தியில் குறியீட்டு முக்கிய நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்ததால், இரண்டு நாள் லாபத்திற்குப் பிறகு இன்று பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 398.13 புள்ளிகள் சரிந்து 81,523.16 புள்ளிகளாக நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 122.65 புள்ளிகள் குறைந்து 24,918.45 புள்ளிகளாக இருந்தது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையான நிஃபிடியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் அதிக லாபம் ஈட்டும் பங்காக உருவெடுத்தது. இது சுமார் 3.88 சதவிகிதம் உயர்ந்தது.

அதைத் தொடர்ந்து ஏசியன் பெயின்ட்ஸ் 2.19 சதவிகிதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.44 சதவிகிதமும் அதிகரித்தது. பிரிட்டானியா 0.57 சதவிகிதம் ஏற்றத்திலும், ஸ்ரீராம் பைனான்ஸ் 0.55 சதவிகிதம் ஏற்றத்திலும் வர்த்தகமானது.

இதற்கு நேர்மாறாக டாடா மோட்டார்ஸ் 5.55 சதவிகிதம் சரிவை சந்தித்தது. ஓ.என்.ஜி.சி 3.57 சதவிகிதமும், விப்ரோ 2.15 சதவிகிதமும், ஹிண்டால்கோ 1.87 சதவிகிதமும் மற்றும் எஸ்பிஐ 1.73 சதவிகிதமும் சரிவைப் பதிவு செய்தன.

இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், லார்சன் & டர்போ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, இந்தஸ் இந்த் வங்கி, டைட்டன் உள்ளிட்ட பங்குகளும் சரிந்து முடிந்தது.

ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் லாபத்துடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.2,208.23 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய கச்சா எண்ணெய் 1.49 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 70.22 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT