மாதிரிப் படம் 
வணிகம்

புதிய உச்சத்தில் முடிந்த சென்செக்ஸ்!

செக்செக்ஸ் 236.57 புள்ளிகள் உயர்ந்து 83,184.80 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

DIN

பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் புதிய உச்சத்துடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 236.57 புள்ளிகள் உயர்ந்து 83,184.80 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.25 புள்ளிகள் உயர்ந்து 25,415.80 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.15 சதவீதம் உயர்வாகும்.

நேற்றைய வணிக நேர முடிவில், சென்செக்ஸ் 82,948.23 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது. இன்றைய வணிக நேர தொடக்கத்தில் 83,359.17 புள்ளிகளுடன் தொடங்கியது. மத்தியில் 500 புள்ளிகள் உயர்நது 83,773.61 என்ற புதிய உச்சத்தை சென்செக்ஸ் எட்டியது. எனினும், வணிக நேர முடிவில் 83,184.80 என்ற புள்ளிகளுடன் சென்செக்ஸ் நிறைவு பெற்றது. இது சென்செக்ஸ் வரலாற்றில் புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

அதிகபட்சமாக என்டிபிசி 2.37%, கோட்டாக் வங்கி 1.76%, டைட்டன் கம்பெனி 1.50%, நெஸ்ட்லே இந்தியா 1.43%, ஹிந்துஸ்தன் யூனிலிவர்ஸ் 1.25%, மாருதி சுசூகி 1.21%, எச்.டி.எஃப்.சி. 0.81%, பார்தி ஏர்டெல் 0.61%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.59% உயர்ந்திருந்தன.

வா்த்தகப் பற்றாக்குறை 10 மாதங்கள் காணாத உயா்வு

அதானி போர்ட்ஸ் 1.45%, எல்&டி 1.26%, டிசிஎஸ் 1.16%, எச்சிஎல் டெக் 1.14%, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 0.87%, டாடா ஸ்டீல் 0.71% வரை சரிந்து காணப்பட்டன.

நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் கேபிஆர் மில் 8.83%, ரெயின்போ சில்ரன் 7.29%, பாலிஸி பஜார் 3.98%, யூனிடட் பிரீவரீஸ் 3.97% பங்குகள் உயர்ந்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

கால்நடைகளை பரிசோதிக்க ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கருவி

236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

கைப்பந்து போட்டியில் கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு

SCROLL FOR NEXT