இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா ஒரு சதவிகிதம் உயர்ந்து இன்றைய காலை நேர வர்த்தகத்தில் புதிய சாதனை படைத்தது.
சென்செக்ஸ் அதன் முந்தைய நாள் முடிவான 83,184.80 இருந்து இன்றைய காலை நேர வர்த்தக துவக்கத்தில் 83,603.04 ஆக துவங்கி சிறித நேரத்தில் ஒரு சதவிகிதம் உயர்ந்தது, அதன் உச்சமான 84,694.46 தொட்டது. நிஃப்டி டாப் 50 அதன் முந்தைய நாள் முடிவான 25,415.80 இருந்து வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதன் புதிய உச்சமான 25,849.25 ஐ அடைந்தது. அதே வேளையில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் தலா ஒரு சதவிகிதம் உயர்ந்தன.
இறுதியாக சென்செக்ஸ் 1,359.51 புள்ளிகள் உயர்ந்து 84,544.31 ஆகவும், நிஃப்டி 375.15 புள்ளிகள் உயர்ந்து 25,790.95 ஆக முடிவடைந்தது.
ஆசாஹி இந்தியா கிளாஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி, சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், ஷியாம் மெட்டாலிக்ஸ், ஹோம் பர்ஸ்ட், ஹெச்.எஃப்.சி.எல், மேன்கைண்ட் பார்மா, சோமேட்டோ, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், பிபி ஃபின்டெக், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஹோல்டிங்ஸ், குவெஸ் கார்ப், ஹேவல்ஸ் இந்தியா உள்ளிட்ட 260 பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை தொட்டது.
பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமானது சுமார் ரூ.466 லட்சம் கோடியிலிருந்து கிட்டத்தட்ட ரூ.472 லட்சம் கோடியாக உயர்ந்ததால் முதலீட்டாளர்களை இன்றைய அமர்வு வளப்படுத்தியது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மாருதி, டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், நெஸ்லே, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 0.27 சதவிகிதமும், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் வங்கி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்த நிலையில் ஷாங்காய் சற்று சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிடத்தக்க உயர்வுடன் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ .2,547.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.29 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 74.66 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.