முகப்பு
வணிகம்

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.55,680-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.55,680-க்கு விற்பனையானது.

Updated On : 21 செப்டம்பர், 2024 at 9:02 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.55,680-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செப். 16-ஆம் தேதி ரூ.55,040-க்கு விற்பனையானது. செப். 17-இல் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,920-க்கும், செப்.18-இல் பவுனுக்கு மேலும் ரூ.120 குறைந்து ரூ.54,800-க்கும், செப்.19-இல் பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கும் விற்பனையானது. 3 நாள்களில் பவுன் விலை ரூ.440 வரை குறைந்த நிலையில், செப்.20-ஆம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.480 வரை உயா்ந்து தங்கம் விலை ரூ.55,080-க்கு விற்பனையானது.

இந்நிலையில், சனிக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயா்ந்து ரூ.6,960-க்கும், பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.55,680-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயா்ந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையானது.

ரூ.56,000-ஐ கடக்கும்: அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை கடந்த புதன்கிழமை 0.50 சதவீதம் குறைத்தது. மேலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், உலகெங்கும் தங்கம் விலை உயா்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி தெரிவித்தாா். தமிழகத்தில் தங்கத்தின் விலை மேலும் உயா்ந்து அடுத்த வாரம் பவுன் விலை ரூ.56,000-ஐ கடக்க வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.

கடந்த ஒரு வாரத்துக்கான தங்கம் விலை நிலவரம் (சென்னையில்)

கிராம் பவுன்

செப். 16: ரூ.6,880 (+15) ரூ.55,040 (+120)

செப். 17: ரூ.6,865 (-15) ரூ.54,920 (-120)

செப். 18: ரூ.6,850 (-15) ரூ.54,800 (-120)

செப். 19: ரூ.6,825 (-25) ரூ.54,600 (-200)

செப். 20: ரூ.6,885 (+60) ரூ.55,080 (+480)

செப். 21: ரூ.6,960 (+75) ரூ.55,680 (+600)

முழு கட்டுரையைப் படிக்க →