கோடையின் தாக்கம் ஆண்டின் தொடக்கத்திலேயே துவங்கிவிட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதிக விலைக்கு விற்கப்படும் குளிர்விப்பான்களை(AC) எளிய மக்களால் வாங்க முடியாத நிலையில், அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக டவர் ஃபேன்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் தரம் மற்றும் விலை பற்றி இங்கு காண்போம்.
உஷா மிஸ்ட் ஏர் பிரைம் (Usha Mist Air Prime)
35 வாட்ஸ் மின்திறனில் செயல்படும் இந்த டவர் ஃபேன், காப்பர் மோட்டாரில் இயங்கக்கூடிய , நீண்ட காலம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.
பார்ப்பதற்கு ஸ்டைலிஷான தோற்றம் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருப்பதால், காற்று வருமா? என்ற சந்தேகம் தேவையில்லை. காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த 3 விதமான மோடுகள் உள்ளன. குறைவாகவே இரைச்சலை வெளியிடும் வகையில் அனைத்து இடங்களில் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை சுமார் ரூ.4,499.
வி-கார்டு வீமேஜிக் நியோ (V-Guard Veemagik Neo)
ஒரேயொரு பிளேடுடன் இயங்கும் இந்த டவர் ஃபேன் 1300rpm மோட்டார் செயல்பாடுக்கு ஏற்ப அறையின் எல்லா பக்கமும் காற்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நல்ல விசாலமான அதிக பரப்பளவு கொண்ட அறையில்கூட அதிக காற்று வரும் வகையிலும் உள்ளது.
இந்த டவர் பேன் உயர்தர பாலிமர் மற்றும் ஏபிஎஸ் பிளேடு கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. விரைவாக தேய்மானம் அடைவதை தடுத்து நிடித்து உழைக்கும் செயல் திறனை கொண்டிருக்கிறது. காற்றின் வேகத்தை தீர்மானிக்க 3 விதமான மோடுகள் உள்ளன.
81.5 செண்டி மீட்டர் உயரமும், 31 செண்டி மீட்டர் நீளமும், 27 செ.மீ அகலமும் கொண்ட இந்த டவர் ஃபேன் எங்கும் கொண்டுச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சலுகை விலையில் சுமார் ரூ.3,650-க்கு வாங்கலாம்.
இதையும் படிக்க: தங்கம் விலை ரூ. 70,000-ஐ நெருங்கியது! மூன்று நாள்களில் ரூ. 4,165 உயர்வு!
சிம்பொனி சரவுண்ட் டவர் பேன் (Symphony Surround Tower Fan)
பிளேடு இல்லாமலேயே இயங்கும் டவர் பேன். இந்த ஃபேனானது ஸ்டைலிஷான தோற்றம் கொண்டிருக்கும். இது எடை குறைவானது என்பதால், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம்.
வீட்டில் குழந்தைகள், செல்லப் பிராணிகள் இருந்தால் பயமின்றி உபயோகிப்பதற்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. 7.62 மீட்டர் வரை (25 அடி) சக்தி வாய்ந்த காற்றை வீசும். இதனுள் ஐ-பியூர் என்னும் தொழில்நுட்பம் தூசுகளை வடிகட்டி சுத்தமான காற்றை அறைக்குள் நிலவச் செய்யும். இந்த டவர் ஃபேன் குளிர்ந்த காற்றையும் வீசும் திறன் கொண்டிருப்பதால் நாள் முழுவதும் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர வைக்கும்.
45 டிகிரி வரை இடது புறமும், வலது புறமும் சுழன்று காற்றை பரப்பும். இந்த டவர் ஃபேனின் விலை சுமார் ரூ.6,499.
பிலிப்ஸ் டவர் ஃபேன் (Philips Tower Fan)
பிளேடு இல்லாமல் செயல் படும் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டது இந்த ஃபேனிலும் விரைவாக காற்றை வெளியேற்றி அறையை குளிரூட்டும் அம்சத்தையும், அறையின் மூலைமுடுக்கெல்லாம் காற்றை கொண்டு செல்லும் திறனையும் கொண்டுள்ளது.
இயல்பான காற்று, இயற்கை காற்று, அமைதியான தூக்கம் என மூன்று மோடுகள் இருக்கின்றன. மேலும், இந்த டவர் ஃபேனை எந்த அறையில் இருந்தும் ரிமோட் இயக்கிக்கொள்ளலாம்.
அதிக இரைச்சலின்றி செயல்படும் இந்த டவர் ஃபேன் மின்சார சிக்கனத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.8,499.
இதையும் படிக்க: பல்வேறு வண்ணங்களில் ஹோண்டா ஹைனஸ் சிபி350!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.