படம் : Motorola  
வணிகம்

விரைவில் அறிமுகமாகும் மோடோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்!

மோடோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் மாடல் ஸ்மார்ட்போன் பற்றி...

DIN

மோடோரோலா நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி புதிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுகிறது.

சமீபத்தில் மோடோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த நிலையில், எட்ஜ் சீரியஸின் அடுத்த மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனை வெளியிடவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி பகல் 12 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும், ஃபிளிப் கார்ட் மற்றும் மோட்டோரோலா விற்பனை தளங்களில் இந்த வகை போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

1.5 K தெளிவுத் திறனுடன் 6.7 இன்ச் 2.5டி பிஓஎல்இடி டிஸ்பிளே

கொரில்லா 3 ப்ரொட்க்‌ஷன்

8 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்

50 எம்பி சோனி கேமிரா உள்ளடக்கிய 3 பின்புறக் கேமிராக்கள்

32 ஜிபி முன்புறக் கேமிரா

5,000 எம்ஏஎச் பேட்டரி, 2 ஆண்டுகள் இயங்குதள அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன.

இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகவுள்ளன.

8 ஜிபி + 256 ஜிபி வகை செல்போனின் விலை ரூ. 22,999 எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெண் நிதியமைச்சர்.. நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு!

முதல்முதலாக விஜய் குறித்து பேசிய இபிஎஸ்! சொன்னது என்ன?

புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்... ஆஸி. மகளிரணியின் புதிய கேப்டன்!

SCROLL FOR NEXT