வணிகம்

மார்ச்சில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி எது?

மார்ச் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சாட் ஜிபிடி முதலிடத்தில் உள்ளது.

DIN

மார்ச் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சாட் ஜிபிடி முதலிடத்தில் உள்ளது.

சாட் ஜிபிடி செயலியில் புதிதாக இடம்பெற்றுள்ள ஜிப்லி அம்சத்தின் எதிரொலியாக அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இச்செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிக பயனர்கள் தரவிறக்கம் செய்த செயலியாக இன்ஸ்டாகிராம், டிக் - டாக் மட்டுமே இருந்துவந்த நிலையில், அவற்றை சாட் ஜிபிடி முந்தியுள்ளது.

ஆப் ஃபிகர் என்னும் செயலிகளின் தரவுகளை சேகரிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

2025 மார்ச் மாதத்தில் மட்டும் 13 மில்லியன் பயனர்கள் சாட் ஜிபிடி செயலியை ஐஓஎஸ் இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்துள்ளனர். 33 மில்லியன் பயனர்கள் ஆப்பிள் இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 46 மில்லியன் பயனர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக த்ரெட்ஸ் செயலியை 10 மில்லியன் பேரும், கப் கட் என்ற எடிட்டிங் செயலியை 9 மில்லியன் பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர்.

சாட் ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் மார்ச் மாதத் தொடக்கத்தில் அறிமுகமானது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.

இந்த அம்சத்தின் மூலம் சாட் ஜிபிடியை தரவிறக்கம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பிப்ரவரி - மார்ச் மாதத்தில் மட்டும் சாட்ஜிபிடிக்கு 28% பயனர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலாண்டை ஒப்பிடும்போது இந்த காலாண்டில் சாட் ஜிபிடி பயனர்களின் எண்ணிக்கை 148% அதிகரித்துள்ளது.

சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி, பிராட் லைட்கேப் தெரிவித்துள்ளதாவது, ’’130 மில்லியன் பயனர்கள் சாட் ஜிபிடியின் புதிய அம்சத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவரை 700 மில்லியன் பயனர்களுக்கு புகைப்படங்களை ஜிப்லி படங்களாக மாற்றிக்கொடுத்துள்ளோம்’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிரீபெய்ட் ரீசார்ஜ் காலக்கெடுவை குறைத்த பிஎஸ்என்எல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT