கோப்புப்படம்.  
வணிகம்

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு

கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

DIN

கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை கடந்த மாா்ச் காலாண்டு இறுதியில் 5,59,808-ஆக இருந்தது.

இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் குறைவு. அப்போது இந்த எண்ணிக்கை 5,80,895-ஆக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் ரூ.40 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை இந்த நகரங்களில் 19 சதவீதம் குறைந்து 1,12,744-ஆக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,39,905-ஆக இருந்தது.

ரூ.40 லட்சம் முதல் 80 லட்சம் விலை கொண்ட விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை மதிப்பீட்டுக் காலாண்டில் 1,57,741-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னா் 1,74,572-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த விலைப் பிரிவில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை தற்போது 10 சதவீதம் குறைந்துள்ளது.

எனினும், நாட்டின் முக்கிய ஏழு நகங்களில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டு இறுதியில் 1,75,293-ஆக இருந்த ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையிலான விலை கொண்ட விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 1,76,130-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நகரங்களில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை மதிப்பீட்டு காலகட்டத்தில் 91,125-லிருந்து 24 சதவீதம் அதிகரித்து 1,13,193-ஆக உள்ளது.

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 28 சதவீதம் குறைந்து 93,280-ஆக உள்ளது. இது, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 1.30 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.

இந்த நகரங்களில் 2025 ஜனவரி - மாா்ச் காலாண்டில் 1,00,020 வீடுகள் புதிதாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவு. அப்போது சந்தையில் புதிதாக 1,10,865 வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

SCROLL FOR NEXT