தங்கம் விலை... ANI
வணிகம்

தங்கம் விலை அதிரடியாக ரூ. 2,200 குறைவு!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 23) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 அதிரடியாக உயர்ந்து முதல்முறையாக ரூ. 74 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை மீண்டும் கிராமுக்கு ரூ. 275 குறைந்து ரூ. 9,015-க்கும் சவரனுக்கு ரூ. 2,200-க்கு குறைந்து ரூ. 72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டாலரின் மதிப்பைக் குறைக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால், தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இந்நிலை நீடிக்கிறது.

இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தங்கம் விலை கிராம் ரூ. 10 ஆயிரத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளியை பொறுத்தவரை மாற்றமின்றி தொடர்ந்து கிராம் ரூ. 111 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,11,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT