சென்னை: சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டுவரும் ஆடை விற்பனையகமான காட்டன் ஹவுஸ் ஆடி மாத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய தொடக்கங்கள் மற்றும் செழிப்புக்கான பருவமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சுப நிகழ்வுகள், மற்றும் குடும்ப விழாக்களுக்கு ஷாப்பிங் செய்ய இது சரியான நேரம் என்பதால் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறோம்.
எங்கள் அனைத்து ஆடைத் தொகுப்புகளும், அவற்றின் செழுமையான அமைப்பு, துடிப்பான
வண்ணங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளுடன் கிடைக்கின்றன. சிஃப்பான் மற்றும் ஜாா்ஜெட் புடவைகள், லைட் அண்ட் லவ்லி, பருத்தி புடவைகள், ஆண்களுக்கான அச்சிடப்பட்ட சட்டைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பாரம்பரிய பட்டு
பாவாடை செட்கள் ரூ.500 முதல் தொடங்குகின்றன. இந்தியா முழுவதும் பயணம் செய்து
அனைத்து வகையான சேகரிப்புகளையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்துகிறோம். காட்டன்
ஹவுஸில் ஜவுளி மட்டுமின்றி, வீட்டுத் தேவைகளுக்கான ஆபரணங்கள், செருப்புகள் போன்றவையும் கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.