பங்குச்சந்தை வணிகம் கடும் சரிவுடன் தொடக்கம் 
வணிகம்

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: சென்செக்ஸ் கடும் சரிவுடன் நிறைவு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், இந்திய இறக்குமதிகள் மீதுஅமெரிக்கா அறிவித்த ஆரம்ப 25 சதவீத வரிகள் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். இவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, ஆட்டோ, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஐடி உள்பட அனைத்துத் துறை பங்குகளும் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் கடும் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.94 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.440.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.4,997.19 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.10,864.04 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் வா்த்தகத்தின் முடிவில் நேற்றைய நிலையில் (80,623.26) இருந்து 765.47 புள்ளிகள் (0.95 சதவீதம்) இழப்புடன் 79,857.79-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,173 பங்குகளில் 1,523 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,506 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 144 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், டாடாமோட்டாா்ஸ், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் உள்பட மொத்தம் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், என்டிபிசி, டைட்டன், பஜாஜ்ஃபின்சா்வ், டிரெண்ட், ஐடிசி ஆகிய 5 பங்குகள் மட்டும் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 233 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி நேற்றைய நிலையில் (24,596.15) இருந்து 232.85 புள்ளிகள்(0.95 சதவீதம்) இழப்புடன் 24,363.30-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 41 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

SCROLL FOR NEXT