புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 1 முதல் புதுதில்லி மற்றும் வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பல போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் இடைநிறுத்தத்திற்கான முதன்மைக் காரணம் பற்றாக்குறையே என்றது. மேலும் இந்த மேம்படுத்தல், 2026ஆம் ஆண்டு பிற்பகுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அதன் போயிங் 787-8 ரக 26 விமானங்களை மறுசீரமைப்பு செய்யத் தொடங்கிய ஏர் இந்தியா, இந்த மறுசீரமைப்பு திட்டமானது வாடிக்கையாளரின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றது.
பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்படுவதால் ஏர் இந்தியா நீண்ட விமானப் பாதைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூர விமான வழித்தடங்கள் மற்றும் செயல்பாடுகள் சிக்கலான தன்மை அதிகரிக்கும் என்றது.
இந்த இடைநிறுத்தம் செயல்பாட்டு காரணிகளின் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டாலும், செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு வாஷிங்டனுக்கு முன்பதிவு செய்த பயணிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் விருப்பங்களின்படி, மற்ற விமானங்களில் மறு முன்பதிவு செய்தல் அல்லது முழு தொகையும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட மாற்று பயண ஏற்பாடுகள் வழங்கப்படும் என்றது ஏர் இந்தியா.
இதையும் படிக்க: பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியீட்ட வெல்கியூர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.