வணிகம்

பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வெல்கியூர்!

வெல்கியூர் நிறுவனத்தின் வாரியமானது ஆகஸ்ட் 22 தேதியன்று ஒன்றுகூடி நிறுவனத்தின் பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் திட்டம் குறித்த அறிவிப்பை பரிசீலிக்கும் என்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: வெல்கியூர் நிறுவனத்தின் வாரியமானது ஆகஸ்ட் 22 தேதியன்று ஒன்றுகூடி நிறுவனத்தின் பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் வெளியீடு குறித்த அறிவிப்பை பரிசீலிக்கும் என்றது.

பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், வெல்கியூர் நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில், அதாவது ஒரு பங்கை 10 பங்குகளாகப் பிரிக்கவும் முடிவு செய்துள்ளது.

பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு போனஸ் பங்கு பங்கை வழங்குவதற்கான திட்டத்தையும் வாரியம் பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளது.

2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் சிறப்பான நிதி முடிவுகளைத் தொடர்ந்து, பணப்புழக்கத்தை மேம்படுத்துவதையும் பங்குகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் ரூ.299.91 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் ரூ.21.21 கோடியாக இருந்தது. 2025-26 முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.23.29 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை

செய்யாற்றில் வாரச்சந்தை நடத்த இடம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT