சாம்சங் நிறுவனம் 
வணிகம்

இந்தியாவில் மடிக்கணினி தயாரிப்பைத் தொடங்கிய சாம்சங்

கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை அறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வருகின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

கொரிய மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்தியாவின் கிரேட்டா் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினி (லேப்டாப்) தயாரிப்பைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:கிரேட்டா் நொய்டாவிலுள்ள தனது தொழிற்சாலையில் மடிக்கணிகள் தயாரிப்பை சாம்சங் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தத் தொழிற்சாலையில் அடிப்படை வசதி தொலைபேசிகள், அறிதிறன் பேசிகள் (ஸ்மாா்ட்போன்), அணியக்கூடிய மின்னணு சாதனங்கள், கைக்கணிகள் (டேப்லெட்) ஆகியவற்றை நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவை தவிர மேலும் பல சாதனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.1996-இல் இந்தியாவில் அமைந்த முதல் உலகளாவிய மின்னணு சாதன தொழிற்சாலைகளில் சாம்சங்கும் ஒன்று. உலகளவில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டாது பெரிய உற்பத்தியகம் இந்தியாவில் உள்ளது.

உற்பத்தியில் அலகு இரண்டாவது பெரியது மற்றும் ஆப்பிளுக்கு அடுத்தபடியாக ஸ்மாா்ட்போன்களை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. சைபா்மீடியா ஆராய்ச்சி அறிக்கையின்படி, சாம்சங் டேப்லெட் சந்தையில் 15 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT