கோப்புப் படம் 
வணிகம்

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

சென்செக்ஸ் 676.09 புள்ளிகள் உயர்ந்து 81,273.75 ஆகவும், நிஃப்டி 251.20 புள்ளிகள் உயர்ந்து 24,882.50 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன.

டிரம்ப் மற்றும் புடின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், எஸ் அண்ட் பி இந்தியாவின் மதிப்பீட்டை மேம்படுத்தியதும் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 676.09 புள்ளிகள் உயர்ந்து 81,273.75 ஆகவும், நிஃப்டி 245.65 புள்ளிகள் உயர்ந்து 24,876.95 புள்ளிகளாக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஒரு சதவிகிதம் உயர்ந்த நிலையில், ஸ்மால் கேப் குறியீடு 1.4 சதவிகிதம் அதிகரித்தது.

வர்த்தகத்தின் முதல் நாளன்று, நேர்மறையான குறிப்பில் தொடங்கிய பங்குச் சந்தை, பல்வேறு துறைகளில் உயர்வு நீடித்ததால், நிஃப்டி 25,000 என்ற புள்ளிகளை நோக்கு செல்ல இது பெரிதும் உதவியது.

நிஃப்டி-யில் மாருதி சுசுகி, நெஸ்லே, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியவை உயர்ந்தும், அதே நேரத்தில் ஐடிசி, டெக் மஹிந்திரா, எடர்னல், எல் அண்ட் டி, என்டிபிசி ஆகியவை சரிந்து முடிந்தன.

சென்செக்ஸில் மாருதி 8.94 சதிவிகிதம் உயர்ந்த நிலையில், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டிரென்ட் ஆகியவை உயர்ந்த நிலையில் ஐடிசி, எடர்னல், டெக் மஹிந்திரா மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்து முடிந்தன.

ஐடி, மீடியா மற்றும் மின்சாரம் தவிர, மற்ற அனைத்து துறைகளும் உயர்ந்து முடிந்தன. ஆட்டோ குறியீடு 4 சதவிகிதம், நுகர்வோர் குறியீடு 3 சதவிகிதம், ரியல் எஸ்டேட் 2 சதிவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் உலோகம், எஃப்எம்சிஜி, தொலைத்தொடர்பு, தனியார் வங்கி ஆகியவை 1 முதல் 2 சதிவிகிதம் வரை உயர்ந்தன.

நசாரா டெக்னாலஜிஸ் மற்றும் டெல்டா கார்ப் ஆகியவை 40 சதவிகித ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்ற அச்சத்தால் தலா 2 சதிவிகிதம் சரிந்தன.

முதல் காலாண்டு இழப்புகள் குறைந்ததால் வோடபோன் ஐடியா பங்குகள் 5 சதிவிகிதம் உயர்ந்த நிலையில், முதல் காலாண்டில் நிலையான முடிவுகளால் அசோக் லேலேண்ட் பங்குகள் 8 சதிவிகிதம் உயர்ந்தன.

ஜிஎஸ்டி மாற்றியமைக்க வாய்ப்புள்ளதால் சிமென்ட் மற்றும் ஆட்டோ பங்குகள் 8 சதிவிகிதம் வரை உயர்ந்தன. அதே நேரத்தில் எஸ் அண்ட் பி மேம்படுத்தல் மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் வங்கி மற்றும் நிதி பங்குகள் 6 சதிவிகிதம் வரை உயர்ந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிந்த நிலையில், கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.62 சதிவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 66.25 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

Stock markets rose sharply on Monday with Sensex closing higher by 676 points and Nifty climbing 1 per cent on heavy buying in auto and consumer durables stocks, buoyed by plans for big bang reforms in the GST regime.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அணிலே, அணிலே ஓரமா போய் விளையாடு!” நாதக தலைவர் சீமான் கிண்டல்!

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

SCROLL FOR NEXT