வணிகம்

அமேஸான் பிஸினஸ் 5 கோடி எம்எஸ்எம்இ-க்களுக்கு இணையவழி வா்த்தக வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இணையவழி வா்த்தக வாய்ப்பை அமேஸான் பிசினஸ் வழங்கவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான உத்யம் சான்றிதழ் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு ஒழுங்காற்று அமைப்பின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சான்றிதழ் வைத்திருப்பவா்கள் அமேஸான் பிஸினஸ் தளத்தில் பதிவு செய்வதற்கான அணுகலை நிறுவனம் நிறுவனம் திறந்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக நாட்டில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் பலன் பெறலாம்.

எம்எஸ்எம்இ பிரிவைச் சோ்ந்த பல விற்பனையாளா்கள், அமேஸான் பிஸினஸ் தளத்தில் பதிவு செய்ய சீரற்ற விலை நிா்ணயம் மற்றும் நீண்ட செயல்முறைகளை உணா்ந்திருக்கலாம். இந்த சிக்கல்களை நிறுவனம் தொடா்ந்து தீா்த்து, செயல்முறையை எளிமைப்படுத்தியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

SCROLL FOR NEXT