கோப்புப்படம் IANS
வணிகம்

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,754.66 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.35 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 204.03 புள்ளிகள் குறைந்து 80,582.51 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை அதிகபட்சமாக 700 புள்ளிகள் வரை சரிந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 44.80 புள்ளிகள் குறைந்து 24,667.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பங்குச்சந்தை படிப்படியாக மீண்டு வருகிறது.

நுகர்வோர் பொருள்களைத் தவிர, ஐடி, பார்மா, மின்சாரம், ரியல் எஸ்டேட் என மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக சார்ந்துள்ளன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% சரிந்துள்ளன.

அதானி எண்டர்பிரைஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, எஸ்பிஐ லைஃப் இன்சுரன்ஸ் ஆகிய சில நிறுவனங்கள் ஏற்றமடைந்த நிலையில் ஸ்ரீராம் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக், சன் பார்மா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்துள்ள நிலையில் பங்குச்சந்தை இன்று சரிந்து வருகின்றன.

Stock Market Update: Sensex down 200 pts, Nifty below 25,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

முக்கியமான ஆல்ரவுண்டராக மாறிய மார்கோ யான்சென்; முன்னாள் வீரர் பாராட்டு!

தனக்கான காலத்தில்... கரிமா பரிஹார்!

உண்மையாக இருப்பதே அழகு... ரியா சச்தேவ்!

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT