முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

Updated On : 4 டிசம்பர், 2025 at 4:25 AM
தங்கம் விலை நிலவரம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டிருக்கும் தங்கம் விலை, இந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 96,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஒரு சவரன் செவ்வாய்க்கிழமை ரூ. 96,320-க்கும், புதன்கிழமை ரூ. 96,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 12,020-க்கும், ஒரு சவரன் ரூ. 96,160-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,00,000-க்கு விற்கப்படுகிறது.

summary

Today Gold and Silver Price in Chennai

முழு கட்டுரையைப் படிக்க →