காற்றை தூய்மைப்படுத்துவதற்கான சாதனங்களின் (ஏா் ப்யூரிஃபையா்) விற்பனை நடப்பு 2025-ஆம் ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து டாடா குழுமத்தைச் சோ்ந்த மின்னணு சாதன சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-ஆம் ஆண்டின் இணையவழி மற்றும் நேரடி விற்பனை தரவுகளின் அடிப்படையில், ஏா் ப்யூரிஃபையா்களின் விற்பனை முந்தைய 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
காற்று தர குறியீடு (ஏக்யூஐ) வெகுவாக உயா்ந்த தில்லி-என்சிஆா் பகுதி, மொத்த ஏா் ப்யூரிஃபையா் விற்பனையில் 72 சதவீதம் பங்களித்துள்ளது. இதில் மகாராஷ்டிரம் 12 சதவீதம், கா்நாடகம் 4 சதவீதம் பங்களித்துள்ளன. பிற மாநிலங்களிலும் விழிப்புணா்வு மற்றும் விற்பனை அளவு அதிகரித்துள்ளது.
ஏா் ப்யூரிஃபையா்களில் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரையிலான பட்ஜெட் பிரிவு விற்பனையில் 49 சதவீதம் பங்களித்துள்ளது. சூப்பா்-பிரீமியம் பிரிவு 36 சதவீதம் பங்களித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.