தேசிய பங்குச்சந்தை ANI
வணிகம்

2-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! 26,000 புள்ளிகளுக்குக் கீழ் நிஃப்டி!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான நேற்று(திங்கள்) பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,742.87 என்ற புள்ளிகளில் சரிவில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 340.43 புள்ளிகள் குறைந்து 340.43  புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.50 புள்ளிகள் குறைந்து 25,856.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, டிரென்ட், எடர்னல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் பிவி, எச்சிஎல் டெக், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் 3.6 சதவீதம் வரை அதிக இழப்பைச் சந்தித்தன, .

சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பாரதி ஏர்டெல் மட்டுமே நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடு தலா 1.5 சதவீதம் சரிந்தன.

துறைகளில், நிஃப்டி ஆட்டோ, ஐடி, உலோகக் குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. நிஃப்டி நிதி, ரியல் எஸ்டேட், தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

Stock Market Updates: Sensex down 360pts, Nifty below 25,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT