கோப்புப் படம் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.89.96 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.89.96 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.89.96 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க பெடரல் கூட்டத்தை முன்னிட்டு முதலீட்டாளர்கள் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு நிலையில் இருப்பதாகவும், தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுப்பதற்கு முன்பு அமெரிக்க பெடரல் கூட்டம் குறித்த முடிவுக்கு காத்திருப்பதாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90 ஆக தொடங்கி, பிறகு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.10 என்ற இன்ட்ரா-டே குறைந்தபட்ச அளவாக சரிந்து, இறுதியாக அதன் முந்தைய முடிவை விட 9 காசுகள் குறைந்து ரூ.89.96 ஆக நிலைபெற்றது.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ.89.87 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! தடுமாறும் மிட், ஸ்மால்கேப் பங்குகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா

பேளூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் 12 கைப்பேசிகள் பறிமுதல்

கிராம ஊராட்சி செயலா்களுக்கு நற்சான்றிதழ்!

‘ உங்க கனவ சொல்லுங்க ’ திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

SCROLL FOR NEXT