முகப்பு
வணிகம்

3 நாள்களுக்குப் பிறகு ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 11 டிசம்பர், 2025 at 6:07 AM
பங்குச்சந்தை வணிகம்
பகிர்:

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,456.75 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 174.94 புள்ளிகள் அதிகரித்து 84,566.21 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67.15 புள்ளிகள் உயர்ந்து 25,825.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்று சென்செக்ஸில் எடர்னல், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், பிஇஎல், அதானி போர்ட்ஸ், எம்&எம், எல்&டி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் 1.7 சதவீதம் வரை உயர்ந்து அதிக லாபம் ஈட்டியுள்ளன.

அதேநேரத்தில் டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், எச்சிஎல் டெக், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ட்ரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

நிஃப்டி மிட்கேப்100, ஸ்மால்கேப்100 குறியீடுகள் முறையே 0.65 சதவீதம், 0.48 சதவீதம் லாபமடைந்துள்ளன.

துறைகளைப் பொருத்தவரை, நிஃப்டி மீடியா அதிகபட்சமாக 0.9 சதவீதம் சரிந்தது. அதைத் தொடர்ந்து எஃப்எம்சிஜி, ஐடி குறியீடு, ஆயில் & கேஸ் குறியீடுகள் சரிந்து வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மெட்டல் மற்றும் ஆட்டோ குறியீடுகள் முறையே 0.6 சதவீதம் மற்றும் 0.4 சதவீதம் உயர்ந்துள்ளன.

summary

Stock Market Updates: Sensex rises 150pts, Nifty above 25,800

முழு கட்டுரையைப் படிக்க →