மோட்டோ எட்ஜ் 70  படம் / நன்றி - மோட்டோரோலா
வணிகம்

இந்தியாவின் மிக மெலிதான ஸ்மார்ட்போன்! மோட்டோ எட்ஜ் 70 அறிமுகம்!

மோட்டோ எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

மோட்டோ எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் மெலிதான வடிவமைப்புடன் குவால்கம் ஸ்நாப்டிராகன் மற்றும் 5000mAh பேட்டரி திறனுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

மூன்று வண்ணங்களில் வெண்கல பச்சை, சாம்பல் நிறம், இலைப்பச்சை ஆகிய மூன்று நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தைக்கு எந்தவித மாற்றங்களுமின்றி மோட்டோ எட்ஜ் 70 வெளியாகியுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 6.7 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்டது.

  • ஆன்டிராய்டு 16 அடிப்படையாகக் கொண்டது. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4500 nits திறனுடையது.

  • ஸ்நாப்டிராகன் 7, 4 ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • 5,000mAh பேட்டரி திறனும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 68W சார்ஜிங் திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்பக்கம் 50MP முதன்மை கேமராவும், 50MP அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா உள்ளது.

  • தொடுதிரையிலேயே விரல் ரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் பட்டன்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

  • நீரில் நனையாத வகையில் IP 68 திறன் கொண்டது.

  • 128GB நினைவகத்தில் இந்த ஸ்மார்போன் தயாரிக்கப்படவில்லை. 256GB நினைவகம் மட்டும்தான்.

  • 8GB உள்நினைவகம் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் ரூ. 29,999.

இதையும் படிக்க | ரூ. 1 லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! வரலாறு காணாத உச்சம்!

Moto Edge 70 smart phone Launched in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT