பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று(செவ்வாய்க்கிழமை ) சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,025.61 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 506.97 புள்ளிகள் குறைந்து 84,706.39 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144.85 புள்ளிகள் குறைந்து 25,882.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, எடர்னல் நிறுவனங்கள் அதிகபட்சமாக 4 சதவீதம் வரை சரிந்தன. டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில் டைட்டன், பார்தி ஏர்டெல் பங்குகள் விலை உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.81 சதவீதம் சரிந்தது, ஸ்மால்கேப் குறியீடு 0.7 சதவீதம் சரிந்தது. துறைவாரியாக, நிஃப்டி மெட்டல், ரியல் எஸ்டேட், தனியார் வங்கிகள் குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு இன்று ரூ. 91.01 ஆகக் குறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.