தங்கம், வெள்ளி விலை நிலவரம் PTI
வணிகம்

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை உயரும் அதே வேளையில், வெள்ளி விலையும் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே, தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்தைத் தொட்டு அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில், மீண்டும் ஒரு லட்சத்தை தொடும் அளவுக்கு நாள்தோறும் விலை உயர்ந்து வருகிறது.

வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி

தங்கம் விலை எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

இன்று காலை வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.226-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5000 உயர்ந்த நிலையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.26 லட்சத்தை எட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT