வணிகம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

சுபன்சிரி கீழ்நிலை நீர்மின் திட்டத்தின் 2-வது வணிக செயல்பாடுகளை, பொதுத்துறை நிறுவனமான என்.ஹெச்.சி.பிசி. நாளை மறுநாள் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: சுமார் ரூ.27,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 2,000 மெகாவாட் சுபன்சிரி கீழ்நிலை நீர்மின் திட்டத்தின் 2-வது வணிக செயல்பாடுகளை, பொதுத்துறை நிறுவனமான என்.ஹெச்.சி.பிசி. நாளை மறுநாள் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஹெச்.சி.பிசி, அருணாசல பிரதேசம் மற்றும் அசாம் எல்லையில் உள்ள வடக்கு லக்கிம்பூர் அருகில் உள்ள இந்த நீர்மின் திட்டத்தை கட்டி வந்தது. இது இந்தியாவில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும்.

சுபன்சிரி நீர்மின் திட்டத்தின் 2-வது அலகில், 250 மெகாவாட் மின்சாரத்தை வணிக நோக்கங்களுக்காக தொடங்குவதாகவும், சமீபத்தில் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலாசாரம், புவியியல், மத எல்லைகளைக் கடந்தது தியானம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்: பிஎஃப்ஐ மீது என்ஐஏ குற்றச்சாட்டு

ஊரக வேலைத் திட்ட ஊதியம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்: ப.சிதம்பரம்

தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி தாக்கு!

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டதை சரிபாா்க்க வேண்டும்: மாவட்டச் செயலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT