Berger Paints 
வணிகம்

பெர்ஜர் பெயிண்ட்ஸின் 14.48% பங்குகளை கையகப்படுத்தும் யுகே பெயிண்ட்ஸ்!

நிறுவனத்தின் உள் மறுசீரமைப்பு மூலம், யுகே பெயிண்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 14.48% பங்குகளைக் கையகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் குழுவின் உள்ள முக்கிய உறுப்பினர், நிறுவனத்தின் உள் மறுசீரமைப்பு மூலம், யுகே பெயிண்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 14.48% பங்குகளைக் கையகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு குறித்து பங்குச் சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பங்குகளைக் கையகப்படுத்தும் நிறுவனத்தின் முழு உரிமையை தனது துணை நிறுவனமான ஜென்சன் & நிக்கல்சன் (ஏசியா) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 16,87,88,138 ஈக்விட்டி பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை, டிசம்பர் 29 அன்று அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் என்றது.

எந்தவிதப் பணப் பரிமாற்றமும் இல்லாத இந்த பரிவர்த்தனை, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் மற்றும் ஜெர்சி நிதி சேவைகள் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இணைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கங்கள் மற்றும் நிர்வாக செலவுகளைக் கணிசமாகக் குறையும் என்றும், அதே நேரத்தில் கண்காணிப்பு மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களை ஒருங்கிணைக்கப்படும் என்ற நிலையில், குழுமத்தின் உள்ள நிதி, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதன் மூலம், வளங்களை உகந்த முறையில் நிர்வகிப்படும்.

பங்குப் பரிமாற்றம் முடிந்ததும், பெர்ஜர் பெயிண்ட்ஸில் யுகே பெயிண்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் நேரடிப் பங்குதாரர் உரிமை 50.09 சதவிகிதத்திலிருந்து 64.57 சதவிகிதமாக உயரும்.

UK Paints (India) Private Limited, a group of Berger Paints India Limited, has informed that it will acquire a 14.48 per cent stake in the paint major through an internal restructuring.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி ஒருவா் காயம்

இருசக்கர வாகனங்கள் மோதல்: வேட்டைத் தடுப்புக் காவலா் உள்பட இருவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஒசூரில் விஷம் குடித்த வட மாநில குடும்பத்தினா்: சிறுவன் உயிரிழப்பு: 4 போ் மருத்துவமனையில் அனுமதி

உடுமலை அருகே ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்னை: முத்தரப்புக் கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்துக்கு தீா்வு

SCROLL FOR NEXT