அறிமுக வர்த்தகத்தில் 8% சரிந்த கேஎஸ்ஹெச் இன்டர்நேஷனல்!
கேஎஸ்ஹெச் இன்டர்நேஷனல் நிறுவனம் அதன் வெளியீட்டு விலையான ரூ.384 ஐ விட கிட்டத்தட்ட 8% தள்ளுபடியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
புதுதில்லி: இன்றைய அறிமுக வர்த்தகத்தில், காந்த சுருள் கம்பியை தயாரிக்கும் கேஎஸ்ஹெச் இன்டர்நேஷனல் நிறுவனம், அதன் வெளியீட்டு விலையான ரூ.384 ஐ விட கிட்டத்தட்ட 8% தள்ளுபடியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில், அதன் வெளியீட்டு விலையிலிருந்து 3.64% சரிந்து, ரூ.370-க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது.
பிஎஸ்இ-யில், வர்த்தக நேரத்தின்போது நிறுவனத்தின் பங்கின் விலை 8.84% சரிந்து ரூ.350.05 ஆக இருந்தது. பிறகு, அதன் பங்குகள் 7.66% சரிந்து ரூ.354.55-ஆக நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
என்எஸ்இ-யில், நிறுவனத்தின் பங்குகள் 7.55% சரிந்து ரூ.355-ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,402.28 கோடியாக இருந்தது.
கேஎஸ்ஹெச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐபிஒ வெளியீட்டில் அதன் பங்கு ஒன்றுக்கு ரூ.365 முதல் ரூ.384 வரையிலான விலை வரம்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.