சோனி நிறுவனம் எச்.டி.-எஸ் 20 ஆர் என்ற புதிய 5.1 சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.
5.1 ஆடியோ அம்சத்துடன் 400 வாட்ஸ் மின்சக்தியில் இயங்கும் வகையில் இந்த சவுண்ட்பார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனம் உலக தரத்திலான மின்சாதனங்களை வடிவமைத்து வருகிறது. அந்தவகையில் எச்.டி.-எஸ் 20 ஆர் என்ற சவுண்ட்பாரை தயாரித்துள்ளது.
அதிகப்படியான பேஸ் சவுண்ட் பெறுவதற்காக சப்வூஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.
எச்.டி.எம்.ஐ., புளுடூத் மூலம் இணைத்து பாடல்களை கேட்க முடியும்
ஆட்டோ, ஸ்டாண்டர்ட், சினிமா, மியூசிக் என பல வகைகளில் தேவைக்கேற்ப மாற்றி துல்லியமான இசையைக் கேட்கலாம்.
டால்பி சவுண்ட் தரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சவுண்ட்பாரின் விலை ரூ. 15,990
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.