2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று(டிச. 31, புதன்கிழமை) பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,793.58 என்ற புள்ளிகளில் தொடங்கியது. தொடக்கம் முதலே ஏற்றம் கண்டுவந்த பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 545.52 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. அதன்படி சென்செக்ஸ் 85,220.60 என்ற புள்ளிகளில் நிலை பெற்றது. அதிகபட்சமாக இன்று 85,437.17 என்ற புள்ளிகளை எட்டியது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 190.75 புள்ளிகள் உயர்ந்து 26,129.60 புள்ளிகளில் நிலை பெற்றது. கடந்த வாரம் நிஃப்டி சரிந்த நிலையில் இன்று மீண்டும் 26,000 புள்ளிகளைக் கடந்து நிறைவு பெற்றுள்ளது.
5 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
இன்று சென்செக்ஸில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், ஸ்ரீராம் பைனான்ஸ், ஜியோ பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்துள்ளன.
அதேநேரத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், சன்பார்மா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.95 சதவீதம், 1.11 சதவீதம் லாபமடைந்துள்ளன.
துறைகளைப் பொருத்தவரை, நிஃப்டி ஐடி தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் லாபம் பெற்றுள்ளன.
நிஃப்டி50 குறியீடு தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் உயர்வுடன் முடிந்தது. இந்த ஆண்டு நிஃப்டி 10.5 சதவீதமும் சென்செக்ஸ் 9.06 சதவீதமும் உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.