கோப்புப் படம் 
வணிகம்

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.

DIN

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பட்ஜெட் தாக்கலின்போது பங்குச்சந்தை ஏற்றமடைந்த நிலையில், பின்னர் சரிந்தது.

இறுதியில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 746.15 புள்ளிகள் அதிகரித்து 77,505.96 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 232.65  புள்ளிகள் உயர்ந்து 23,482.15 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

துறைகளில் நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், ஆட்டோ மொபைல், எஃப்எம்சிஜி ஆகிய துறைகள் உயர்ந்த நிலையில், மின்சாரம், உலோகம், ஐடி, எரிசக்தி, பொதுத்துறை நிறுவனங்கள் சரிந்தன.

ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை தவிர, மற்ற அனைத்து துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. மின்சாரம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி துறைகள் 0.5 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

நிஃப்டியில் எல்& டி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பவர் கிரிட் கார்ப், எச்டிஎஃப்சி லைஃப், சிப்லா ஆகியவை அதிகமாக நஷ்டமடைந்த நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் டிரென்ட், மாருதி சுசுகி, டாடா கன்ஸ்யூமர், ஈச்சர் மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை லாபமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

கால்நடைகளை பரிசோதிக்க ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கருவி

236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

கைப்பந்து போட்டியில் கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு

SCROLL FOR NEXT