முகப்பு
வணிகம்

2வது நாளாகச் சரிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 213 புள்ளிகளும் நிஃப்டி 23600 புள்ளிகளுக்கு மேலும் சரிந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2025 at 12:34 PM
மாதிரிப் படம்
பகிர்:

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக பங்குச் சந்தை வணிகம் 2வது நாளாக இன்று (பிப். 6) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 213 புள்ளிகளும் நிஃப்டி 23, 650 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

மருத்துவம், ஐடி மற்றும் சேவைத் துறைகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2030 பங்குகள் சரிவுடனும் 1908 பங்குகள் ஏற்றத்துடனும் காணப்பட்டன. 125 பங்குகள் எந்தவித மாற்றங்களின்றி காணப்பட்டன.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழு புதன்கிழமை ஆலோசனையைத் தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த ஆலோசனை பிப். 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கொள்கைக் குழுவின் முடிவுகளுக்கு முன்னதாக, தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 6) சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213.12 புள்ளிகள் சரிந்து 78,058.16 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.27 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.95 புள்ளிகள் சரிந்து 23,603.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில்0.39 சதவீதம் சரிவாகும்.

20 நிறுவனப் பங்குகள் சரிவு

வணிக நேரத் தொடக்கத்தில் 78,513.36 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 78,551.66 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், அதிகபட்சமாக 77,843.99 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 213 புள்ளிகள் சரிந்து 78,058 புள்ளிகளாக நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனங்கள் சரிவுடன் இருந்தன.

இதில் அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் நிறுவனப் பங்குகள் 1.73% உயர்ந்திருந்தது. இன்ஃபோசிஸ் 0.99%, ஆக்சிஸ் வங்கி 0.74%, எச்சிஎல் டெக் 0.63%, டெக் மஹிந்திரா 0.52%, இந்தஸ்இந்த் வங்கி 0.41%, ஐசிஐசிஐ வங்கி 0.38%, எச்டிஎஃப்சி வங்கி 0.35%, ரிலையனஸ் 0.27%, கோட்டாக் வங்கி 0.22% உயர்ந்திருந்தன.

இதேபோன்று பார்தி ஏர்டெல் -2.46%, டைட்டன் கம்பெனி -2.30%, என்டிபிசி -2.13%, எஸ்பிஐ -1.81%, ஐடிசி -1.58%, பவர் கிரிட் -1.43% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

நிஃப்டியைப் பொறுத்தவரை, வணிக நேரத் தொடக்கத்தில்

23,761.95 புள்ளிகளுடன் தொடங்கி, அதிகபட்சமாக 23,773.55 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் அதிகபட்சமாக 23,556.25 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 92 புள்ளிகள் சரிந்து 23,603 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் டிரெண்ட், சோலார் இந்தியா, மேக்ரோடெக், ஃபோனிக்ஸ் மில், சிசிஎல் புராடெக்ட்ஸ், பிஎஸ்இ, ஜூப்லியன் ஃபுட், நிப்பான் லைஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.

ஜிஎஸ்கே பார்மா, கேஸ்ட்ரோல் இந்தியா, ஜேகே லக்‌ஷ்மி சிமென்ட், கன்சாய் நிரோலக், ஜிந்தால் சா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →