FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 756.84 புள்ளிகள் உயர்ந்து 78,516.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 198.50 புள்ளிகள் சரிந்து 24,378.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல் 2026, 4:19 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மூன்று நாள் ஏற்றத்திற்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட பெரும் விற்பனையை தொடர்ந்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறவைடந்தன.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் நிலையற்ற தன்மையால் ஏற்படக்கூடும் அச்சம் சந்தையை வெகுவாக பாதித்தது.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் 494.12 புள்ளிகள் சரிந்து 78,779.21 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 142.2 புள்ளிகள் சரிந்து 24,434.40 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 756.84 புள்ளிகள் உயர்ந்து 78,516.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 198.50 புள்ளிகள் சரிந்து 24,378.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் எச்.சி.எல் டெக் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியதால், அதன் பங்குகள் கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை சரிந்தன. அதே வேளையில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தும் மறுபுறம் என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ட்ரென்ட் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எம்&எம் ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், என்டிபிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.2% உயர்ந்த நிலையில், ஸ்மால் கேப் குறியீடும் 1%க்கும் அதிகமாக உயர்ந்தன.

துறைவாரியாகப் பார்க்கையில், ஐடி குறியீடு ஏறக்குறைய 4% சரிந்தன. தனியார் வங்கி குறியீடு 0.8% வீழ்ச்சி உடனும், எண்ணெய் & எரிவாயு, எஃப்.எம்.சி.ஜி, ஊடகம், உலோகம் மற்றும் ரியால்டி ஆகிய துறைகள் தலா 0.4% வளர்ச்சியைப் பதிவு செய்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 1,918.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமானது. அதே வேளையில் ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் காம்போசிட் குறியீடு குறியீடு ஆகியவை உயர்ந்து இருந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.40 சதவீதம் சரிந்து 98.09 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

summary

Benchmark equity indices Sensex and Nifty declined on Wednesday after a three-day rally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments