கோப்புப் படம் 
வணிகம்

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதால் இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக பாதித்தது.

DIN

புதுதில்லி: அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்தது.

கடந்த ஐந்து நாட்களில், மும்பை பங்குச் சந்தை குறியீடு சுமார் 2,290.21 புள்ளிகள் சரிந்தது வர்த்தகமாகி வருகிறது. ஐந்தாவது நாளாக இன்றைய வர்த்தகத்தில், இன்று 30-பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 1,018.20 புள்ளிகள் சரிந்து இரண்டு வார குறைந்த அளவான 76,293.60 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.

தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்க வரிகள் காரணமாக, கடந்த ஐந்து நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.16.97 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.

பங்குகளின் பலவீனமான போக்கைக் கண்காணித்து வந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் கடந்த ஐந்து நாட்களில் சுமார் ரூ.16,97,903.48 கோடி சரிந்து ரூ.4,08,52,922.63 கோடியாக உள்ளது. இன்று மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.9,29,651.16 கோடி சரிவை பதிவு செய்துள்ளது.

30 பங்குகள் கொண்ட சென்செக்ஸின் இன்று சோமேட்டோ 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது. இன்று பாரதி ஏர்டெல் மட்டுமே லாபம் ஈட்டியது.

டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது நிலையில், ஸ்மால்கேப் பங்குகள் 3.40 சதவிகிதமும், மிட்கேப் பங்குகள் 2.88 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

இன்று அனைத்து துறை பங்குகளும் சரிந்து முடிந்தது. ரியல் எஸ்டேட் 3.14 சதவிகிதமும், தொழில்துறை 2.87 சதவிகிதமும், நுகர்வோர் துறை 2.73 சதவிகிதமும், மூலதன பொருட்கள் 2.59 சதவிகிதமும், ஆட்டோ 2.49 சதவிகிதமும், உலோகம் 2.23 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,918 பங்குகள் வர்த்தகமான நிலையில் 2,532 பங்குகள் சரிந்தும், 326 பங்குகள் உயர்ந்தும் 60 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமானது.

இதையும் படிக்க: பாட்டா இந்தியா லாபம் 1.2% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT