மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் 
வணிகம்

ஹரியாணாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி!

உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா இன்று ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

DIN

புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2022ல் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், கார்கோடா ஆலை ஆண்டுக்கு 2,50,000 யூனிட் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும், அதில் காம்பாக்ட் எஸ்யூவி - ஆன பிரெஸ்ஸாவை உற்பத்தி செய்யும் என்றது.

மாருதி சுசூகியின் துணை நிறுவனமான சுசூகி மோட்டார் குஜராத் பிரைவேட் லிமிடெட் உள்பட மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி திறன் 26 லட்சம் யூனிட்களாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், மாருதி சுசூகி இந்தியாவின் தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆஃப் ஜப்பான், இந்தியாவில் தனது சந்தைப் பங்கு சரிந்து வருவதால், வணிக சூழல் மாறிவிட்டது என்றது. வளர்ந்து வரும் மின்சார வாகன பிரிவு காரணமாக அதன் உத்தியை மறுபரிசீலனை செய்து ஒரு புதிய இடைக்காலத் திட்டத்தை அறிவித்தது.

இந்தியாவில் மீண்டும் 50 சதவிகத சந்தைப் பங்கை பிடிக்க, நாட்டை உலகளாவிய ஏற்றுமதி மையமாகவும் பயன்படுத்தவும், ஆண்டுக்கு 40 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்குவதை மாருதி சுசூகி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது.

2025-30 ஆம் ஆண்டிற்கான அதன் புதிய இடைக்கால திட்டத்தில், நிறுவனமானது இந்தியாவை, அதன் மிக முக்கியமான சந்தையாக அடையாளம் கண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய போட்டியாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு மின்சார வாகன போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருக்கும் பிரிவில், 2030-க்குள் நான்கு புதிய மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்துவதை மாருதி சுசூகி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாருதி சுசுகி இந்தியா தற்போது மூன்று லட்சம் வாகனங்களை ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்து வருகின்ற நிலையில், இந்த பத்து ஆண்டு இறுதிக்குள், ஆண்டுக்கு 7.5 முதல் 8 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிக்க: அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை: மாநில மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

தனியாா் நிறுவனத்தில் திருட்டு: தேடப்பட்டவா் கைது

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

மகளிருக்கான காவல் உதவி செயலி விழிப்புணா்வு

SCROLL FOR NEXT