புகையிலை 
வணிகம்

இந்தியாவின் புகையிலை ஏற்றுமதி 8% அதிகரிப்பு!

நாட்டின் புகையிலை ஏற்றுமதி, 2024ல் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் நிலையில், அது ரூ.13 ஆயிரம் கோடி தாண்டும் எனறார் மத்திய அரசின் மூத்த அதிகாரி.

DIN

புதுதில்லி: நாட்டின் புகையிலை ஏற்றுமதி, 2024ல் 8 சதவிகித வளர்ச்சி எட்டும் போது, அதன் வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடி தாண்டும் எனறார், மத்திய அரசின் பெயர் வெளியிடாத மூத்த அரசு அதிகாரி.

அதே வேளையில், விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க புகையிலை வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக புகையிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா, பிரேசில் மற்றும் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக ஃப்ளூ-க்யூர்டு வர்ஜீனியா புகையிலை உற்பத்தியில் இந்தியா 4வது பெரிய உற்பத்தியாளராகும்.

இதையும் படிக்க: சரிவிலிருந்து மீண்ட பெட்ரோல், டீசல் விற்பனை

பிரேசிலுக்கு அடுத்தபடியாக உற்பத்தி செய்யப்படாத புகையிலை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் கருவூலத்திற்கு கணிசமான அந்நிய செலாவணி அதிகரித்தும் வருகிறது.

இந்த ஆண்டு ரூ.13,000 கோடி மேல் வணிகம் நடைபெறும் என்று கணித்துள்ள வேளையில், புகையிலை விவசாயிகளின் வருமானமும் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

2023-24ல் ஏற்றுமதி ரூ.12,005.89 கோடியாக உள்ள நிலையில், புகையிலை வாரியமானது புகையிலை தொழிற்துறையின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்யும் பயிர் திட்டமிடல் மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT