வணிகம்

பஜாஜ் விற்பனை 3,23,125-ஆகக் குறைவு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை டிசம்பா் மாதத்தில் 3,23,125-ஆகக் குறைந்துள்ளது.

Din

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை டிசம்பா் மாதத்தில் 3,23,125-ஆகக் குறைந்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனம் 3,23,125 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,26,806-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 19 சதவீதம் சரிந்து 1,28,335-ஆக உள்ளது. 2023 டிசம்பா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,58,370-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் 1,24,631-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 15 சதவீதம் உயா்ந்து 1,43,838-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

SCROLL FOR NEXT