அதானி குழுமம் 
வணிகம்

அதானி வில்மர் பங்கு 10% சரிவு!

அதானி குழுமம் அதன் எஃப்எம்சிஜி நிறுவனத்தில் உள்ள 20% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,148 கோடியை திரட்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்தது முடிந்தது.

DIN

புதுதில்லி: அதானி குழுமமானது, அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள 20 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,148 கோடியை வெளிச்சந்தையில் திரட்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து, வில்மரின் பங்குகள் சுமார் 10 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் அதன் விலை 9.84 சதவிகிதம் வரை சரிந்து ரூ.292.05 ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் 9.69 சதவிகிதம் வரை சரிந்து ரூ.292.10 ஆக உள்ளது. மத்திய வர்த்தகத்தில் சற்று மீண்டு ரூ.296.95 ஆக வர்த்தகம் ஆனது.

இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு சரிவான நிலையை எட்டியது!

கடந்த மாதம் அதானி வில்மரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு, குழுமமானது, ஜனவரி 10 ஆம் தேதி நிறுவனத்தில் 17.54 கோடி பங்குகளை (13.50 சதவிகித பங்குகள்) சில்லறை அல்லாத முதலீட்டாளர்களுக்கும், ஜனவரி 13 ஆம் தேதி (சில்லறை முதலீட்டாளர்களுக்கு) தலா ரூ.275 என்ற குறைந்தபட்ச விலையிலும் விற்பனை செய்யும். இதுகுறித்து நிறுவனமானது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT