கோட்டக் மஹிந்திரா வங்கி 
வணிகம்

கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 10% உயர்வு!

கோடக் மஹிந்திரா வங்கியின் 3-வது காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து, ரூ.4,701 கோடி ஆக உயர்ந்துள்ளது.

DIN

புதுதில்லி: கோடக் மஹிந்திரா வங்கியின் 3-வது காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து, ரூ.4,701 கோடி ஆக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலையானது 9.66% உயர்ந்து ரூ.1,928.65 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 9.68 சகதவிகிதம் உயர்ந்து இது ரூ.1,929 ஆக நேற்று (திங்கள்கிழமை) முடிவடைந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி விதிக்க வணிகக் கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ததையடுத்து, தொழில்நுட்ப முன்னணியில் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று வங்கியின் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான அசோக் வாஸ்வானி தெரிவித்தார்.

இதையும் படிக்க: பேடிஎம் நிறுவனம் நிகர இழப்பு ரூ.208.5 கோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

வாசிக்க வாங்கியவை!

SCROLL FOR NEXT