3வது காலாண்டு வருவாய் தொடர்ந்து டெக் மஹிந்திரா பங்குகள் உயர்வு!
நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவில் நிறுவனத்தின் லாபம் 14.11% அதிகரித்து ரூ.1,122 கோடியாக உயர்வு.
புதுதில்லி: ஐடி சேவைகள் நிறுவனமான டெக் மஹிந்திரா, நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவில் அதன் லாபம் 14.11% அதிகரித்து ரூ.1,122 கோடியாக இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (திங்கள்கிழமை) அதன் பங்குகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் 2.85% உயர்ந்து ரூ.1,718.10ஆகவும், வர்த்தக நேரத்தின் போது இது 3.95% உயர்ந்து ரூ.1,736.55 என்ற 52 வார உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில் 2.86% உயர்ந்து ரூ.1,718.30ஆக வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், வர்த்தக நேரத்தின் போது அதன் பங்குகள் 3.92% உயர்ந்து ரூ.1,736ஐ எட்டியது.
Advertisement
Advertisement
இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,685.14 கோடி அதிகரித்து ரூ.1,68,325.92 கோடியாக உள்ளது.
அதே வேளையில், மஹிந்திரா குழும நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.983.2 கோடி நிகர லாபத்தையும், அதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் ரூ.1,194 கோடி லாபத்தையும் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tech Mahindra on Monday ended nearly 3 per cent higher after the firm reported a 14.11 per cent jump in profit to Rs 1,122 crore for December quarter FY26.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.