வணிகம்

கனரா வங்கியின் லாபம் 12% உயர்வு!

பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.

DIN

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 12.25 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,104 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3,656 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 11.7 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.36,114 கோடியாக இருந்தது என்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த செயல்படாத சொத்துக்கள் விகிதம் டிசம்பர் 2023 நிலவரப்படி 4.39 சதவிகிதத்திலிருந்து டிசம்பர் 2024 ல் 3.34 சதவிகிதமாக மேம்பட்டது. இது தவிர, நிகர செயல்படாத சொத்துக்கள் விகிதம் டிசம்பர் 2023 ல் 1.32 சதவிகிதத்திலிருந்து டிசம்பர் 2024 ல் 0.89 சதவிகிதமாக மேம்பட்டது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.86.33 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது... தேஜூ அஸ்வினி!

இந்தியாவுக்கு சேவையாற்ற ஆவல்: எலான் மஸ்க்

உனக்காகவே நான் வாழ்கிறேன்... பிரீத்தி முகுந்தன்!

வங்கதேசம்: இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் ராஜிநாமா!

குடியரசுத் தலைவர் நாளை மணிப்பூர் பயணம்!

SCROLL FOR NEXT