பங்குச்சந்தையில் ஏற்றம் 
வணிகம்

ஏற்றத்தில் பங்குச்சந்தை! மத்திய பட்ஜெட் தாக்கத்தை ஏற்படுத்துமா?

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

DIN

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பங்குச்சந்தை ஏற்றமடைந்து வரும் நிலையில், காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 417.12 புள்ளிகள் அதிகரித்து 77,176.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148.5 புள்ளிகள் உயர்ந்து 23,398.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

எல்&டி, டைட்டன், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

சன் பார்மா, ரிலையன்ஸ், எம்&எம், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஐடி துறைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் உலோகத் துறை சரிந்து வருகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் நாளை(பிப். 1) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதுவும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT