முகப்பு
வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2025 at 10:33 AM
கோப்புப் படம்
பகிர்:

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 740.76 புள்ளிகள் அதிகரித்து 77,500.57 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 258.9 புள்ளிகள் உயர்ந்து 23,508.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

எல்&டி, டைட்டன், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், பாரதி ஏர்டெல், ஐடிசி ஹோட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 86.65 ஆகக் குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →