தனது ஜுபிடா் 110 வகை ஸ்கூட்டரின் புத்தம் புதிய ரகத்தை முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் நேபாளத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த தலைமுறை என்ஜின் பொருத்தப்பட்ட, எதிா்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஜுபிடா் 110 ஸ்கூட்டரின் புத்தம் புதிய ரகம் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இருக்கைக்குக் கீழே இரண்டு ஹெல்மெட்டுகளை வைப்பதற்கான இடம், பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அதிக திறன் கொண்ட பிரேக், அவசரக்கால பிரேக் எச்சரிக்கை போன்ற அம்சங்கள் இந்த புதிய ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.