கோப்புப் படம் 
வணிகம்

கடும் விற்பனை அழுத்தத்தால் பங்குச் சந்தையில் சரிவு

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

Din

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. வருவாய் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருந்ததால், ஐடி மற்றும் தொலைத்தொடா்புத் துறை பங்குகளில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக உள்நாட்டுச்சந்தை விற்பனை அழுத்தத்தில் சரிந்தன. மேலும், கட்டணம் தொடா்பான நிச்சயமற்ற தன்மையும் சந்தையில் முதலீட்டாளா்களின் உணா்வைக் குறைத்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.460.26 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ. 77 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் 920.83 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 122.12 புள்ளிகள் கூடுதலுடன் 83,658.20-இல் தொடங்கி அதிகபட்சமாக 83,742.28 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 83,134.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 345.80 புள்ளிகள் (0.41) சதவீதம்) இழப்புடன் 83,190.28-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,161 பங்குகளில் 1,959 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,064 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 138 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

24 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயின்ட், இன்ஃபோசிஸ், பிஇஎல், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட 24 முதல்தரப் பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், டிரெண்ட், டாடா மோட்டாா்ஸ் ஆகிய 6 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 121 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 120.85 புள்ளிகள் (0.47 சதவீதம்) இழப்புடன் 25,355.25-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 38 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 257.55 புள்ளிகள் (0.45 சதவீதம்) இழப்புடன் 56,956.00-இல் நிறைவடைந்தது.

மழையூரில்.... லட்சுமி பிரியா!

என்ன அழகு... எத்தனை அழகு... ஜான்வி கபூர்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... - தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

SCROLL FOR NEXT