கோப்புப்படம் 
வணிகம்

3-வது நாளாக சரிவில் பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும்(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,820.76 என்ற புள்ளிகளில் தொடங்கியது. நண்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 681.83 புள்ளிகள் குறைந்து 82,508.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 198.30 புள்ளிகள் குறைந்து 25,156.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிந்தன. தற்போது வரை முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை ரீதியாக நிஃப்டி ஐடி, ஆட்டோ உள்ளிட்ட துறைகள் அதிக இழப்பைச் சந்தித்து வருகின்றன.

டிசிஎஸ், எம்&எம், அப்போலோ, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ள நிலையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றம் கண்டுள்ளன.

ஆசிய பங்குச்சந்தைகளைப் பொருத்தவரை ஜப்பானின் நிக்கேய் 225, தென்கொரியாவின் கோஸ்பி பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வரும் நிலையில் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், சீனாவின் ஷாங்காய், தைவான், ஹாங்காங்கின் ஹாங்செங் உள்ளிட்டவை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு வருகிற ஆகஸ்ட் 1 முதல் கண்டிப்பாக அமலுக்கு வரும் என டிரம்ப் கூறியுள்ளது உலக பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

stock market today: Sensex cracks over 700 points, Nifty slips below 25,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!

லிட்டில் ஹார்ட்... பிரியங்கா மோகன்!

நெஞ்சோடு இழுக்குற... ஜொனிதா!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

SCROLL FOR NEXT