பங்குச் சந்தை ANI
வணிகம்

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,779.95 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 428.18  புள்ளிகள் குறைந்து 82,298.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 82,784.24 என்ற புள்ளிகள் வரை சென்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,243.30 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் தற்போது 117.40 புள்ளிகள் குறைந்து 25,102.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஐடி, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளும் அதிகமாக சரிவடைந்துள்ளன.

எட்டர்னல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், டாடா மோட்டார்ஸ், ஜியோ பைனான்ஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன.

அதேநேரத்தில் நெஸ்லே, ட்ரெண்ட், டெக் மஹிந்திரா, ஸ்ரீராம் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

Stock Market Update: Sensex down 400 pts, Nifty below 25,150 as IT, oil & gas stocks crash

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT