ஓப்போ ரெனோ 14 எஃப்எஸ்  படம் \ நன்றி - எக்ஸ்
வணிகம்

அதிக பேட்டரி! ... ஓப்போ ரெனோ 14 வரிசையில் புது ஸ்மார்ட்போன்!

ஓப்போ ரெனோ 14 வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஓப்போ ரெனோ 14 வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

ஓப்போ ரெனோ 14 எஃப் என்ற புதிய ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதை விட கூடுதல் அம்சங்களுடன் ஓப்போ ரெனோ 14 எஃப்எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை ஓப்போ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இரு வேறு வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதைக் காணலாம்.

ஓப்போ ரெனோ 14 எஃப்எஸ் சிறப்பம்சங்கள்

  • ஓப்போ ரெனோ 14 எஃப்எஸ் ஸ்மார்ட்போனானது நீலம், பச்சை ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  • பின்புறம் சதுர வடிவிலான தட்டையான பகுதியில் கேமரா லென்ஸ்கள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • 6.57 அங்குல அமொலிட் திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஸ்நாப்டிராகன் 6, 4ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • பின்புறம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மெயின் கேமராவானது 50MP உடன் சோனி நிறுவனத்தின் IMX882 சென்சார் கொண்டது. 8MP அல்ட்ராவைட் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கேமராவில் கூகுள் தேடுபொறி, செய்யறிவு நுட்பங்களை பயன்படுத்தக் கூடிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • எஃப் வரிசையில் இல்லாத வகையில் 6,000mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 12GB RAM உள் நினைவகம் 512GB நினைவகம் கொண்டது.

  • இந்திய ரூபாய் மதிப்பில் 45,500-க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | சரிவில் இருந்து மீண்ட ஸ்மாா்ட்போன் விற்பனை

OPPO Reno14 FS 5G Leak Reveals Price, Specs, And Design Ahead Of Rumoured Launch

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாங்காங்கை போராடி வென்றது இலங்கை

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா்கள் மனு

இந்திய வீரா்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: ஆட்டத்தின் நடுவரை நீக்கக் கோரும் பாகிஸ்தான்

தருமபுரி, கிருஷ்ணகிரியில் ‘அன்புக் கரங்கள்’ திட்ட தொடக்க விழா

SCROLL FOR NEXT